தொகுதி மறுவரையறை செய்வதில் எந்தத் தவறும் இல்லை – எடப்பாடி பழனிசாமி
- Surendran Sumdraraj
- 12 Aug, 2026
சென்னை, ஆக. 12-
நிர்வாக வசதிக்காக மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்களின் விகிதாசாரம் பாதிக்கப்படக் கூடாது என்றார்.
தமிழகத்தின் 7.18 சதவீத விகிதாசாரம் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளதாகவும், அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கான மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



