நாட்டையும் காக்கத் தெரியவில்லை; இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்கத் தெரியவில்லை – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 28-

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய இரண்டையும் பாதுகாப்பதில் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியதாவது, நீட் மற்றும் நெட் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்குப் பிறகு, தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) முக்கிய ராணுவத் தகவல்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கையொப்பங்கள் அடங்கிய 31 ஜிபி தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்ததாக வெளியான தகவல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன என்றார்.

இந்தச் சைபர் அச்சுறுத்தல் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையிலும், பாதுகாப்பு அமைச்சகமும் மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார். “வினாத்தாள் கசிவு முதல் தேசிய பாதுகாப்பு தரவு கசிவு வரை, நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டையும் காக்கத் தெரியவில்லை; இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்கத் தெரியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *