நடப்பாண்டின் முழு சூரிய கிரகணம்: அற்புதக் காட்சியை கண்டு இரசித்த மக்கள்
- Surendran Sumdraraj
- 13 Aug, 2026
மாஸ்கோ, ஆக. 13-
நடப்பாண்டின் அரிய முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்த நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மக்கள் இந்த வியப்பூட்டும் வானியல் நிகழ்வை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் கடந்து செல்லும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படுவதே முழு சூரிய கிரகணம் ஆகும். இதன்போது பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரத்தைப் போன்ற சூழல் உருவாகும். சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டமாக காட்சியளிக்கும்.
ரஷ்யாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் நிலவு சூரியனை மறைக்கத் தொடங்கியது. இதையடுத்து சூரியனின் வெளிப்புற ஒளிவட்டம் மட்டும் தெரிந்த நிலையில், பார்வையாளர்கள் அரிய காட்சியை ஆர்வத்துடன் ரசித்தனர்.
ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் வானியல் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிரகணத்தை காண திரண்டனர்.
ஸ்பெயினில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் தென்பட்டதால் மக்கள் ஆரவாரத்துடன் அதனை வரவேற்றனர். சில ஐரோப்பிய நாடுகளில் சூரிய அஸ்தமனத்துடன் இணைந்து கிரகணம் நிகழ்ந்ததால், பார்வையாளர்களுக்கு மேலும் அரிய காட்சியாக அமைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



