இனம் மற்றும் மத விவகாரங்கள் நாட்டின் ஒற்றுமைக்கு மருட்டலாக விளங்குகிறது-சுல்தான் நஸ்ரின் ஷா!

top-news
FREE WEBSITE AD

கோல கங்சார், நவ. 10 -

அரசியல் கருவிகளாக இனம் மற்றும் மத விவகாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது, நாட்டின் ஒற்றுமைக்கு மருட்டலாக விளங்குகிறது. அவை உடனடியாக துடைத் தொழிக்கப்பட வேண்டும் என்று பேராக் மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக, சட்டப்பூர்வமான கருவிகளாகப் பயன்படுத்தப்படும்போது, மத வெறியில் மறைக்கப்பட்டிருக்கும் அதிகப்படியான பேச்சுகளும் 'சினமூட்டும் முழக்கங்களும்' அதிகமாக பரப்பப்படுவதாக, பேராக் ஆட்சியாளர் குறிப்பிட்டார்.“அத்தகைய பேச்சுக்களும் முழக்கங்களும், ஒரு தீப்பொறியைப் பற்றவைக்கக் கூடிய எரிமலைக்கு ஒப்பானவை.

“அவற்றை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால், அவை நமது நாட்டைப் பேரழிவிற்கு இட்டுச் செல்லும் ஆற்றல் கொண்ட பகைமை நெருப்பைப்பற்ற வைக்கும் அபாயம் உள்ளது என்று சுல்தான் நஸ்ரின் எச்சரித்துள்ளார்.இனம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட சினமூட்டும் செயல்கள் தொடருமேயானால், அவை நாட்டு மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைத்து, அவர்களை ஒற்றுமையின் பாதையில் இருந்து மேலும் விலகிச் செல்ல வழிவகுத்து விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கலாச்சார அத்துமீறலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் மரியாதை மற்றும் நல்லொழுக்கத்தின் எல்லைகளை மீறும் பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் இரண்டையும் தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என்றும் சுல்தான் நஸ்ரின் கேட்டுக் கொண்டார்.“யாரையும் நாகரிகமற்றவர்களாக மாற்றவோ அல்லது பழக்க வழக்கங்களையும் நமது பாரம்பரியத்தையும் மதிக்காமல் வாழவோ நாம் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேராக், கோல கங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்கண்டாரியாவில், நேற்று சனிக்கிழமை நடந்த தமது 68ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்ட நிகழ்ச்சியில் உரையாற்றும்போது சுல்தான் நஸ்ரின் இவ்வாறு தெரிவித்தார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *