வெட்கம் கெட்ட ம.இ.கா & அம்னோ & ம.சீ.ச! - YB. THULSI எச்சரிக்கை!
- Thina S
- 25 Jul, 2024
மதுபான நிறுவனத்திடமிருந்து சீனப் பள்ளி நன்கொடை பெற்றதற்கு டி.ஏ.பி கட்சியைத் தொடர்புப்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்தும்படி BUNTONG சட்டமன்ற உறுப்பினர் thulsi manogaran எச்சரித்துள்ளார். முக்கியமாக ம.இ.கா, பாஸ், ம.சீ.ச கட்சியைச் சேர்ந்தவர்களும் அம்னோவின் AKMAL SALEH போன்றவர் டி.ஏ.பி கட்சி மீது அவதூறு பரப்பும் வகையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்துடன் தொடர்புபடுத்தி அறிக்கைகளை வெளியிடுவது வெட்கக்கேடானது என thulsi manogaran சாடினார்.
பள்ளிக்கூடங்கள் மதுபான நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவது குற்றம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இச்சம்பவத்திற்கும் டி.ஏ.பி கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ம.இ.கா, பாஸ், ம.சீ.ச கட்சியின் இளைஞர் பகுதியினர் அறிக்கை வெளியிட்டிருப்பது அவர்களின் முதிர்ச்சியற்ற அரசியலைக் காட்டுவதாகவும் அவர் சாடினார். நீண்ட காலமாக மக்களின் ஆதரவை இழந்த ம.இ.கா போன்ற கட்சிக்கு இந்த மலிவான விளம்பரங்கள் தேவையற்றது என அவர் வலியுறுத்தினார்.
சம்மந்தப்பட்ட மதுபான நிறுவனத்தைப் பற்றியும் பள்ளி கூடத்தையும் பற்றி பேசினால் போதாது என டி.ஏ.பி கட்சியை வம்புக்கு இழுக்கிறது என thulsi manogaran கடுமையாகச் சாடினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *