யோங் பெங் பள்ளி மரணச் சம்பவம்: நிகழ்விடத்தில் சிசிடிவி இல்லை - கல்வி அமைச்சர்
- Surendran Sumdraraj
- 05 Oct, 2026
கோலாலம்பூர், அக். 5 –
ஜொகூர் மாநிலம் யோங் பெங் பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியின் மண்டபத்தில், நான்காம் படிவ மாணவி ஐரீன் சோபியா முகமது கைரூல் பைசல் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை என்று கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ பட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் நடந்த பள்ளியில் சிசிடிவி வசதி இருந்தாலும், குறிப்பிட்ட மண்டபப் பகுதியில் அது பொருத்தப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பள்ளிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்த கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
புதிய சிசிடிவி கேமராக்களை கட்டங்களாக பொருத்தும் நடவடிக்கைகளுடன், ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதும் கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

