நூருல் இஸ்ஸாவுக்கு கால அவகாசமின்றி விடுமுறை: பிகேஆர்
- Surendran Sumdraraj
- 14 Aug, 2026
ஆயர் கெரோ, ஆக. 14 —
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், தனது உயர்கல்வியைத் தொடர்வதற்காக அடுத்த வாரம் முதல் விடுமுறை எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் அதற்குத் தேவையான முழுமையான கால அவகாசத்தை வழங்க கட்சி தயாராக இருப்பதாகவும் பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் புசியா சாலே தெரிவித்தார்.
அவரது விடுமுறைக்கு குறிப்பிட்ட கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். கட்சிக்காகவும் மக்களுக்காகவும் நூருல் இஸ்ஸா இதுவரை மேற்கொண்ட பணிகள் முக்கியமானவை என்றாலும், தனது கல்வியைத் தொடர்வதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என புசியா குறிப்பிட்டார்.
“தற்போதைக்கு, துணைத் தலைவர் விடுமுறை எடுப்பதற்கு எந்தக் கால வரம்பையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை. அவர் தனது கல்வியைத் தொடர விரும்புகிறார். அவர் மீண்டும் தனது பொறுப்புகளை ஏற்கத் தயாராகும் போது, அவரை வரவேற்க கட்சி தயாராக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
நூருல் இஸ்ஸா, கல்வியை நிறைவு செய்வதற்காக தற்காலிகமாக கட்சிப் பணிகளில் இருந்து விலகினாலும், பிகேஆர் தலைமை அவருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



