நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழுவில் பக்காத்தான் ஹாராப்பான் இடம்பெறாது: சைபுல் யாசான் விளக்கம்

top-news

சிரம்பான், ஆக. 5-

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களில் பக்காத்தான் ஹராப்பான் (PH) சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்ற சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை ஜோஹோல் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சைபுல் யாசான் சுலைமான் மறுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இந்தத் தகவலுக்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்றும், அது உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பக்காத்தான் ஹாராப்பான் பிரதிநிதிகள் ஆட்சிக்குழுவில் இடம்பெறுவது போன்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அண்மையில் நடைபெற்ற 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் (PRN16) வெற்றி பெற்ற பாரிசான் நேஷனல் (BN) சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலில் ஆலோசிக்கப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

"அத்தகைய முடிவு உண்மையில் எடுக்கப்பட்டிருந்தால், தேர்தலில் வெற்றி பெற்ற எங்களிடம் அது குறித்து முன்கூட்டியே விவாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், இதுவரை அதுபோன்ற எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை," என்று சைபுல் யாசான் விளக்கமளித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *