ஒதுக்கப்பட்ட நிதியை மீறி செலவிடமாட்டோம் – அகமது சாஹிட் ஹமிடி உறுதி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 7 –

அரசாங்கம் ஒப்புதல் வழங்கிய நிதி ஒதுக்கீட்டை விட அதிகமாக கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சு செலவிடாது என்று துணைப் பிரதமரும் அந்த அமைச்சின் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்ட தொகை அல்லது அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையிலேயே அமைச்சின் செலவினங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

“ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக எந்த அமைச்சும் செலவழிக்காது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே செலவுகள் மேற்கொள்ளப்படும். அழகான வரவு-செலவுத் திட்டம் என்று ஒன்றில்லை. அனுமதிக்கப்பட்ட தொகையை மீறி எவ்வாறு செலவிட முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற கிராமப்புற சமூக மையங்கள் மற்றும் தேசிய தகவல் பரவல் மையங்களுக்கிடையிலான மூலோபாய ஒத்துழைப்பு பயிலரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *