நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச்சூடு; 3 பேருக்கு 31-ஆம் தேதி வரை போலீஸ் காவல்!

top-news

மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரையும், வரும் 31-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகனான டைகர் ஷெராப், மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்துக்குச் சென்றுவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது கார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் நடிகர் டைகர் ஷெராப் காயமின்றி தப்பினார். எனினும், அவரது கார் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை குற்றப்பிரிவு போலீசார், குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இதுதொடர்பாக ரேஹான் என்ற சுக்கா, ரித்திக் குர்மி என்ற ரோஷன், பூல் சிங் ஆகிய 3 பேரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *