TIKTOK LIVE மூலம் போதைப்பொருளை ஊக்குவித்த 18 வயது இளம்பெண் கைது!

top-news
FREE WEBSITE AD

சமூகவலைத்தளத்தில் நண்பர்களுக்குப் போதைப்பொருள் பயன்படுத்தும்படி வலியுறுத்திய 18 வயது இளம் பெண் உட்பட 17 வயது இளைஞரையும் காவல் துறை கைது செய்தது. Tiktok live மூலம் நண்பர்களுடன் உரையாடும்போது போதைப்பொருளைக் கேமராவில் காண்பித்த 18 வயது இளம் பெண்ணுக்கு எதிராகக் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 17 வயது மலாய் ஆடவரையும் 18வயது மலாய் பெண்ணையும் கைது செய்துள்ளதாக மலாக்கா மாநிலக் காவல் ஆணையர் DATUK WIRA HAJI ZAINOL SAMAH தெரிவித்தார். முதற்கட்ட சோதனையில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இல்லை என்றாலும், போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகவும் போதைப்பொருளைப் பயன்படுத்தும்படி வலியுறுத்தியதற்காகவும் அவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக DATUK WIRA HAJI ZAINOL தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *