பணக்கார பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்தை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை-ஃபாமி!
- Muthu Kumar
- 09 Oct, 2024
புத்ராஜெயா, அக். 9-
இடைநிலை அறிவியல் பள்ளிகளில் சேர்க்கப்படும் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்தை ரத்து செய்வதா இல்லையா என்பதை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாமி நேற்று தெரிவித்தார்.அந்த விவகாரம் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இது பற்றி இன்னும் ஒரு முடிவெடுக்கப்படவில்லை. அது இன்னும் விவாதிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். மின்சார உதவித்தொகையைப் போல் அல்லாது கல்வி உதவித்தொகைக்கு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. மின்சார உதவித் தொகை அகற்றப்பட்டதில் 85 விழுக்காடு பயனர்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் கல்வி விவகாரத்தை பொறுத்தமட்டில், முடிவெடுப்பதற்கு முன்பாக பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று ஃபாமி கூறினார்.
மூத்த அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள், பணக்கார வர்த்தகர்கள் ஆகியோரின் பிள்ளைகள் உதவித் தொகை பெறப்பட்ட கல்விக் கட்டணத்தின் பயனை அனுபவித்து வருவது நியாயமற்றதாகத் தோன்றுகிறது என்று கடந்த திங்கள்கிழமையன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.இதுபோன்று நடந்துவரும் பண விரயத்திற்கு ஒரு முடிவுகட்ட அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அன்வார் தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *