அரசாங்கம் உதவித்தொகை சீரமைப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்வது மிக அவசியம்-மொகிதீன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 24-

ரோன்95 பெட்ரோலுக்கு இலக்கிடப்பட்ட உதவித்தொகையை அமல்படுத்தும் தனது முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் பாகோ தொகுதி நாடாளுமன்ற  உறுப்பினர் முஹிடின் யாசின் வலியுறுத்தினார்.அத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பொருட்களின் விலைகள் உயரும் ஆபத்து உள்ளது என்று முன்னாள் பிரதமருமான முஹிடின் கூறினார்.

"டி15” எனப்படும் பெரும் பணக்கார குடும்பத்தினர் மீது அமல்படுத்தப்படும் இலக்கிடப்பட்ட உதவித்தொகையினால் அப்பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது குறைந்த வருமானம் கொண்ட பி40 பிரிவினரும் நடுத்தர வருமானம் கொண்ட எம்40 பிரிவினரும் விலை உயர்வினால் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எச்சரித்தார். அடுத்தாண்டில் பணவீக்க அளவு 2 விழுக்காட்டுக்கும் 3.5விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசாங்கம் தனது உதவித்தொகை சீரமைப்புக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மிக அவசியம் என்று மக்களவையில் 2025ஆம் ஆண்டுக்கான விநியோக மசோதா மீதான விவாதத்தின்போது முஹிடின் வலியுறுத்தினார். பெரும் பணக்கார குடும்பத்தினருக்கு ரோன்95 பெட்ரோலை கூடுதல் விலையில் விற்க அரசாங்கம் முடிவு செய்யுமானால், அக்குடும்பங்களுக்கான மானிய உறைவிடப் பள்ளிக் கட்டணத்தை அரசாங்கம் மீட்டுக் கொள்ளக்கூடாது என்றும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முஹிடின் கேட்டுக் கொண்டார்.

"டி15" பிரிவைச் சேர்ந்த பணக்கார குடும்பத்தினர் அடுத்தாண்டில் பெட்ரோலுக்காக கூடுதல் பணத்தைச் செலவிட வேண்டிவரும். அதே நேரத்தில் தங்களுடைய குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்கள் அதிக பணத்தைச் செலவிட வேண்டிவரும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விவகாரங்களில் நாம் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது என்றார் அவர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *