அம்பானி வீட்டு கல்யாணத்தில் அட்லீ செய்த 10 நிமிட அனிமேஷன் தரமான சம்பவம்!

top-news

அட்லீ-ஷாருக்கான் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் ஜவான்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் புகழ் எட்டா உயரத்திற்கு சென்றுவிட்டது.

உலகளவில் இப்படம் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்று, அங்கு ஒரு தமிழ் இயக்குனர் இவ்வளவு பெரிய சாதனை செய்வது என்பது எளிதான விஷயம் இல்லை.

இப்படத்தின் வெற்றி இந்தியளவில் அட்லீக்கு பெரும் அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு தனது மனைவியுடன் சென்று கலந்துகொண்டார் இயக்குனர் அட்லீ.

இவர் அந்த திருமணத்திற்கு சென்றது மட்டுமே நாம் அறிவோம். ஆனால், அவர் அந்த திருமணத்திற்காக 10 நிமிடங்கள் கொண்ட அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி, அதனை திருமணத்தில் திரையிட்டுள்ளனர்.

இந்த அனிமேஷன் படத்திற்கு அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளாராம். இந்த விஷயத்தை அந்த திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த விஷயம் தற்போது அட்லீயை இந்திய ரசிகர்கள் மத்தியில் வியந்து பார்க்க வைத்துள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *