லா லீகா கால்பந்துப் போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணி கெல்தா விகோ அணியை வீழ்த்தியது!

top-news

மாட்ரிட், செப். 28-

லா லீகா கால்பந்துப் போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.பலோய்டோஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் கெல்தா விகோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரேஸ் அடித்தார்.

மற்றோர் ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். ரியல் பெதிஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்பாஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *