சாக்கு போக்கு சொல்வதை நிறுத்துங்கள்! 6 தொகுதிகளைக் காலியானதாக அறிவியுங்கள்! - சபாநாயகருக்கு பெர்சாத்து கோரிக்கை!
- Shan Siva
- 29 Jun, 2024
கோலா திரங்கானு, ஜூன் 29: நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல்
சாக்குப்போக்கு கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும், கட்சியால் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட பிரதிநிதிகள்
தற்போது வைத்திருக்கும் 6 நாடாளுமன்ற இடங்களையும் உடனடியாக, அவை காலியாகிவிட்டதாக அறிவிக்க வேண்டும் என்றும் பெர்சாத்து கட்சி
நடாளுமன்ற சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளது.
கிளந்தான் மாநிலத்தில்
நடைபெறவுள்ள நெங்கிரி மாநில இடைத்தேர்தலுடன் இணைந்து, குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்
நடத்த தேர்தல் ஆணையத்திற்கு (EC) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.
நெங்கிரி இடைத்தேர்தலுடன் ஒரே நேரத்தில் இந்த
இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவது, தேர்தல் நடத்துவதில் உள்ள நேரம், செலவுகள் மற்றும் பிற ஆதாரங்களை தேர்தல் ஆணையம் சேமிக்க உதவும் என்று ரசாலி கூறினார்.
எனவே, இந்த 6 நாடாளுமன்ற ஆசனங்களையும் காலியாக உள்ளதாக அறிவித்து, மக்களிடம் ஆணையை திரும்பப் பெறுவதற்கு சபாநாயகர் வழிவகை
செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *