பயனற்ற விவாதங்களை நிறுத்துங்கள்!- லிம் குவான் கருத்துக்கு கல்வி அமைச்சரின் உதவியாளர் சாடல்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 27:: சீனப் பள்ளியின் நிதி திரட்டும் முயற்சியில் மதுபான நிறுவனத்தின் பங்கு பற்றிய சர்ச்சையில்  கல்வி அமைச்சரை விமர்சித்ததற்காக டிஏபி தலைவர் லிம் குவான் எங்கை கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக்கின் உதவியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சரின் அரசியல் செயலாளரான அதிகா சைரா ஷஹாருதீன், இதுபோன்ற விமர்சனங்கள் தேவையற்றது என்றும், பயனற்ற விவாதங்களை நிறுத்துமாறும் அவர் கூறினார்.

ஏறக்குறைய 40 வருடங்கள் எம்.பி.யாக இருந்து, மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் பரந்த அனுபவத்தை சேகரித்துள்ள அவர், இன மற்றும் மத பதட்டங்களுக்கு பங்களிக்கும் பிரச்சினைகளில் விளையாடாமல், ஒரு அரசியல்வாதியாக நெருக்கடிகளை நிர்வகிப்பதில் வல்லவர் என்று தாம் நம்புவதாக அவர் ஓர்அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *