ஈப்போவைச் சிதைத்த புயல்! 200 வீடுகள் சேதம்
- Shan Siva
- 20 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 20: பேராக், ஈப்போவில் உள்ள அஞ்சோங் பெர்ச்சாம் பகுதியைச் சுற்றியுள்ள ஏழு குடியிருப்புப் பகுதிகளில், நேற்று மாலை ஏற்பட்ட கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ஒரு அசாதாரண புயலால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இந்த இடியுடன் கூடிய புயல் பிற்பகல் சுமார் 3.45 மணியளவில் பதிவானதாகவும், நிலைமையைக் கண்காணிக்கப் பணியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும் கிந்தா குடிமைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மேலும், அப்பகுதியைச் சுத்தம் செய்வதற்கும், விழுந்த மரங்களை அகற்றுவதற்கும் ஈப்போ நகர சபை மாலை 5.05 மணியளவில் குழுக்களை அனுப்பியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
பரவலாகப் பகிரப்பட்ட காணொளிகளில், புயல் ஈப்போவைச் சுற்றிப் பேரழிவை ஏற்படுத்துவதும், பலத்த காற்றினால் மரங்களும் மின் கம்பங்களும் கூட சரிந்து விழுந்து, அவற்றின் சிதைவுகள் சிதறிக் கிடப்பதும் காணப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெனாகா நேஷனல் பெர்ஹாட் பல பகுதிகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

