நெகிரி செம்பிலான் தேர்தலில் மொத்தம் 103 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஜூலை 18: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மொத்தம் 103 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தேர்தல் ஆணையம்  உறுதிப்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் 36 தொகுதிகளிலும் போட்டிகள் நடைபெறும் என்றும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் இரண்டும் மாநிலம் தழுவிய அளவில் வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் முறையே 36 மற்றும் 25 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, பெர்சாத்து கூட்டணியிலிருந்து 24 வேட்பாளர்களும், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து 11 வேட்பாளர்களும், பார்ட்டி சோசியலிஸ் மலேசியா, பார்ட்டி ஒராங் அஸ்லி மலேசியா மற்றும் பார்ட்டி பெர்ஜாசா ஆகிய கூட்டணிகளிலிருந்து தலா ஒரு வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.

நான்கு சுயேச்சை போட்டியாளர்களும் இந்தத் தேர்தலில் பங்கேற்கின்றனர்.

முழுப் பட்டியலில் 94 ஆண்களும் ஒன்பது பெண்களும் அடங்குவர்.

இந்தத் தேர்தலில் 11 நேரடிப் போட்டிகளும், 21 மும்முனைப் போட்டிகளும், இரண்டு நான்கு முனைப் போட்டிகளும் மற்றும் இரண்டு ஐந்துமுனைப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

மொத்தம் 889,490 நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *