எரிமலையில் ஏறியபோது மின்னல் தாக்கி சுற்றுலா பயணி பலி

top-news
FREE WEBSITE AD

ரோம்: இத்தாலியில் உள்ள மவுண்ட் எடனா எரிமலையில் ஏறியபோது மின்னல் தாக்கியதில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார். 

ஐரோப்பாவில் செயல்பாட்டில் உள்ள மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எடனாவை காணவும், அதில் ஏறவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் கென்னஸ் நகரைச் சேர்ந்த 29 வயதான சிஸ்லி என்பவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் மவுண்ட் எடனா எரிமலையில் ஏறியுள்ளார்.

அப்போது அப்பகுதியில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டதுடன், மின்னலும் தாக்கியது. இதில் சிஸ்லி பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி அன்றிரவு சுமார் 10 மணியளவில் சிஸ்லி உயிரிழந்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *