பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்ட காந்தியின் கடிதங்கள்: ரூ.16.2 கோடிக்கு ஏலம்
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
மும்பை: மகாத்மா காந்தி கைப்பட எழுதிய அரிய கடிதங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணங்கள் மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.16.2 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. இந்த ஏலம் இந்திய வரலாற்று ஆவணங்கள் விற்பனையில் உலக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியின் நெருங்கிய நண்பருமான ஆனந்த் டி. ஹிங்கோரனிக்கு காந்தி ஏராளமான கடிதங்களை எழுதியுள்ளார். ஹிங்கோரனியின் மனைவி மறைந்தபோது அவருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காகவும், வாழ்க்கை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகவும் காந்தி தொடர்ந்து கடிதங்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி எழுதிய 688 கையெழுத்துப் பிரதிகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. உண்மை, அகிம்சை, அச்சமின்மை, தீண்டாமை ஒழிப்பு, மத சமத்துவம், உழைப்பு, சேவை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து காந்தி தனது கடிதங்களில் பதிவு செய்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் காந்தியின் கடிதங்கள் மட்டுமின்றி, கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட பொருட்கள் என மொத்தம் 86 பொருட்கள் இடம்பெற்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



