டிரம்ப்–புதின் மீண்டும் தொலைபேசியில் பேச்சு; 90 நிமிடங்கள் நீண்ட முக்கிய ஆலோசனை
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
வாஷிங்டன், ஜூலை 7 –
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில், உக்ரைன் போர் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிலைமை குறித்து முக்கியமாக பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரு தலைவர்களும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அடுத்தகட்ட முயற்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிரம்ப், உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், புதின் ரஷியாவின் பாதுகாப்பு நிலைப்பாடுகளை விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா–ரஷியா உறவுகள், ஐரோப்பிய பாதுகாப்பு சூழல் மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றம் ஆகியவையும் இந்த உரையாடலில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



