பிபா தலைவர் இன்ஃபான்டினோவுக்கு டிரம்ப் ஆதரவு
- Surendran Sumdraraj
- 11 Aug, 2026
வாஷிங்டன், ஆக. 11-
பணியிடத்தில் முறைகேடான உறவு தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் தோல்வியடைந்தத் தனியார் முதலீட்டுத் திட்டம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பதிவில், இன்ஃபான்டினோவைப் பதவியில் இருந்து மாற்றுவது குறித்து பிஃபா பரிசீலித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எந்த காரணத்திற்காகவும் பிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை மாற்றுவது குறித்து பரிசீலித்தால், அது பிபா செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கும்,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான இன்ஃபான்டினோவை டிரம்ப் பாராட்டியதுடன், அவரை “சிறந்தவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஃபான்டினோ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிபா தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு பதவியைத் தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



