2020 தேர்தலில் நான் தோற்க சீனாதான் காரணம் – டிரம்ப் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

வாஷிங்டன், ஜூலை 17-

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடைவதற்குச் சீனாவின் தலையீடே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சி வாயிலாக சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

2020 தேர்தல் காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 22 கோடி வாக்காளர்களின் தகவல்களைச் சீனா சட்டவிரோதமாகப் பெற்றதாக டிரம்ப் கூறினார். தமக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை வெளியிட அமெரிக்கப் பத்திரிகையாளர்களுக்குச் சீனா பணம் வழங்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான முழுமையான ஆதாரங்கள் உரையின்போது வெளியிடப்படவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகக் கூறிய டிரம்ப், அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். வாக்களிப்பதற்கு அடையாள அட்டை மற்றும் குடியுரிமைச் சான்றை கட்டாயமாக்கும் புதிய தேர்தல் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *