DAP-யைத் தொடர்ந்து தாக்குவது கொஞ்சம் வருத்தம்தான்! - ஹாடியின் கருத்து நாட்டை பிளவுபடுத்தும்
- Shan Siva
- 19 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 19: இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களுக்கு எதிராக எம்.சி.பி நடத்திய போராட்டத்தை டிஏபி புகழ்வதாக குற்றம் சாட்டி, ஹாடி இன்று காலை ஒரு முகநூல் பதிவில் DAP மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் இன்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராடுவதில் இந்தக் கட்சிக்கு பிரிட்டிஷார் ஆதரவளித்தனர், பின்னர் அதன் சொந்த அரசியலுக்காக அது தடை செய்யப்பட்டது. அவசர காலத்தின்போது பல மலாய் ராணுவ வீரர்களும் காவல்துறை அதிகாரிகளும் தங்கள் உயிரை இழக்க இது காரணமாக அமைந்தது என்று அவர் கூறினார்.
மறுவளர்ச்சி என்ற போர்வையில், நகர்ப்புறங்களில் இருந்து ஏழை மலாய்க்காரர்களை வெளியேற்றுவதற்காக, ங்கா கோர் மிங்கின் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தால் நகர்ப்புற புனரமைப்புச் சட்டம் முன்மொழியப்பட்டது என்றும் மராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
ஹாடியின் கருத்துக்கள் பாகுபாடு காட்டுபவை என்று விவரித்த கோக், அவர் தொடர்ந்து டிஏபியைத் தாக்குவது தனக்கு "கொஞ்சம் வருத்தமாக" இருப்பதாகவும் கூறினார்.
அண்மைய காலமாக DAP கட்சி MCPயைப் புகழ்கிறது என்பது உட்பட, அவர் நிறைய இனவெறி மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்று தாம் நினைப்பதாக புக்கிட் ஜாலிலில் கொடி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் FMT-யிடம் கூறினார்.
அவருடைய நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியாது, அல்லது இந்தக் கூற்றுகள் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு அதிக வாக்குகளைப் பெற உதவுமா என்பதும் தெரியாது. ஆனால், இதுபோன்ற கூற்றுகள் மலேசியாவை மேலும் பிளவுபடுத்தும், மேலும் அதிக எதிர்ப்பைச் சந்திக்கும என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



