அது நன்கொடை அல்ல! முகைதீனுக்கும் தொடர்பு இருக்கு! - MACC
- Shan Siva
- 02 Sep, 2026
கோலாலம்பூர், செப் 2: ஜனா விபாவா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட திட்டங்களுக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் 25.3 மில்லியன் ரிங்கிட்டை பெர்சாத்து வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனா விபாவாதிட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் உயர்நீதிமன்ற விசாரணையின் போது எம்ஏசிசி சிறப்பு நடவடிக்கை பிரிவு விசாரணை அதிகாரி மஸேரி முகமட் ஜைனி இந்த தகவலை வெளியிட்டார்.
KCJ இன்ஜினியரிங் Sdn Bhd, Nepturis Sdn Bhd, Mamfor Sdn Bhd, Sutracom Sdn Bhd மற்றும் KCJ இன்ஜினியரிங் இயக்குனர் டத்தோஸ்ரீ அஸ்மான் யூசாஃப் ஆகியோருடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட தொகை என்று கூறினார்.
தற்போது MACC புலனாய்வுப் பிரிவின் 'பி' பிரிவின் தலைவராக இருக்கும் மஸேரி, பெர்சத்துவின் CIMB வங்கி மற்றும் ஆம்பேங்க் கணக்குகளைச் சோதித்ததில், அந்தக் கணக்குகளைக் கட்டுப்படுத்தியவர்களில் முகைதீனும் ஒருவர் என்பது கண்டறியப்பட்டதாகக் கூறினார்.
செப்டம்பர் 22, 2021 மற்றும் நவம்பர் 22, 2022-க்கு இடையில் நடந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு RM25.3 மில்லியன் ஆகும், என்று அவர் தனது சாட்சிய அறிக்கையில் கூறினார்.
நிறுவனங்களால் டெபாசிட் செய்யப்பட்ட பணம் அரசியல் நன்கொடைகள் அல்ல என்றும், மாறாக, அந்தத் திட்டங்களைப் பெறுவதற்கு அவர்களுக்கு உதவியதில் முகைதீனின் பங்குடன் தொடர்புடையது என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



