அது எங்கள் தவறு அல்ல! RTM விளக்கம்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 21: மலேசியாவின் 17வது மன்னராக ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் நேற்று (ஜூலை 20) இஸ்தானா நெகாராவில் பதவியேற்றது குறித்து ஃபேஸ்புக்கில் வைரலான எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் ஆங்கிலத்தில் பதிவேற்றவில்லை என்று ஆர்டிஎம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது. 

மலேசிய ஒலிபரப்புத் துறையின் மக்கள் தொடர்புப் பிரிவு, ஓர் அறிக்கையில், RTM இன் அதிகாரப்பூர்வ Facebook தளத்தில் தோன்றியிருப்பது Facebook அமைப்பின் தானியங்கி மொழிபெயர்ப்பு என்று தெரிவித்துள்ளது.

பயனர்கள் தானியங்கி மொழிபெயர்ப்பைச் செயல்படுத்தினால், ஆங்கில மொழிபெயர்ப்பு தோன்றும்.

பேஸ்புக் அமைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறானது. RTM மாட்சிமை தங்கிய மாமன்னரின் 17 வது  முடி சூட்டு விழா தொடர்பாக எவ்வித தவறான  உள்ளடக்கத்தையும் பதிவேற்றவில்லை என்று  அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *