வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான் - பராக் ஒபாமா தகவல்!
- Muthu Kumar
- 16 Feb, 2026
வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான 'ஏரியா 51'-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இதை அமெரிக்கா இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், யூடியூபா் ஒருவருக்கு ஒபாமா அளித்த பேட்டியின்போது, வேற்றுக்கிரகவாசிகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஒபாமா, வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான், ஆனால் நான் இதுவரை பாா்த்ததில்லை என்றாா்.ஏரியா 51-இல் வேற்றுக்கிரகவாசிகளை வைத்து ஆய்வு நடத்தப்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அது உண்மையில்லை என்றும், அங்கு பாதாள சுரங்க ஆய்வுக் கூடம் எதுவும் இல்லை என்றும் கூறினாா்.
அமெரிக்க முன்னாள் அதிபா் ஒருவரே, வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக கூறியிருப்பது, உலகம் முழுவதும் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆா்வலா்களுக்கு இது புதிய ஆா்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



