ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 3வதுசுற்றில் மெத்வதேவ்!

top-news

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் அலெக்சாண்டர் முல்லர் உடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார்.இதில் மெத்வதேவ் 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *