சரவாக்கில் 7 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம்
- Surendran Sumdraraj
- 13 Aug, 2026
கூச்சிங், ஆக. 13-
எல்லை தாண்டிய புகைமூட்டம் காரணமாக சரவாக்கில் ஏழு பகுதிகளில் காற்று மாசு குறியீடு (IPU) இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
நேற்று காலை ஒன்பது பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவான நிலையில், இன்று அந்த எண்ணிக்கை ஏழாகக் குறைந்துள்ளது.
காற்று மாசு குறியீட்டு மேலாண்மை அமைப்பான APIMS வெளியிட்ட தரவுகளின்படி, சமரஹான் மற்றும் செரியான் பகுதிகளில் அதிகபட்சமாக 183 என்ற IPU பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கூச்சிங்கில் 177, ஸ்ரீ அமானில் 159, சரிகேயில் 158, முகாவில் 152 மற்றும் சிபுவில் 152 என்ற அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.
IPU அளவு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 வரை மிதமான தரமாகவும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையாகவும் வகைப்படுத்தப்படுகிறது.
அதேவேளை, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையாகவும், 300-க்கும் அதிகமான IPU ஆபத்தான நிலையாகவும் கருதப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



