2026 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது துனிசியா
- Tamil Malar (Reporter)
- 09 Sep, 2025
ஜோஹன்னஸ்பர்க், செப். 10-
செய்தி-வெற்றி மைந்தன்
முகமட் பென் ரோம்தானின் கூடுதல் நேரத்தில் அடித்த கோல்,
துனிசியாவை 2026 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறச் செய்தது. இந்தப் போட்டியில், துனிசியா அணி ஈக்வடோரியல் கினியாவை 1-0 என்ற கோல்
கணக்கில் வீழ்த்தியது.
எகிப்தின் முன்னணி கிளப் அல் அஹ்லியைச் சேர்ந்த மத்திய
திடல் ஆட்டக்காரர் முகமட் பென் ரோம்தான்,
94-ஆவது நிமிடத்தில் பிராஸ் சவாத் அளித்த உதவியைக் கோலாக மாற்றினார். இந்த வெற்றியின் மூலம், எச்
குழுவில் எட்டு போட்டிகளில் 22 புள்ளிகளுடன் துனிசியா முதலிடத்தை உறுதி செய்தது.
இந்த அணி, தனது நெருங்கிய போட்டியாளரான நமீபியாவை விட 10
புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது. நமீபியாவுக்கு ஒரு போட்டி மட்டுமே
மீதமுள்ள நிலையில், அவர்களால் துனிசியாவின்
புள்ளிகளை எட்ட முடியாது.
இந்த வெற்றியின் மூலம், மொராக்கோவுக்கு
அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில் இருந்து உலகக் கோப்பைக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி
பெற்ற இரண்டாவது நாடாக துனிசியா உருவெடுத்துள்ளது. இந்த
சாதனை, துனிசியா கால்பந்து
ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



