இந்திய வம்சாவளியினர் இருவர் பிரிட்டன் அமைச்சர்களாக பதவியேற்பு
- Surendran Sumdraraj
- 22 Jul, 2026
லண்டன், ஜூலை 22-
பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இந்த புதிய அமைச்சரவை பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண் மற்றும் லிசா நந்தி ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பீகாரில் பிறந்த கனிஷ்கா நாராயண், பிரிட்டனின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பம், புதுமை மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் இந்த புதிய அமைச்சுப் பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கனிஷ்கா நாராயணின் நியமனம், பிரிட்டன் அரசின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஏஐ துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த தொழிலாளர் கட்சி தலைவர் லிசா நந்தி மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பிரிட்டன் அரசியலில் முக்கிய பங்காற்றி வரும் லிசா நந்தியின் தொடர்ச்சியான அமைச்சரவைப் பொறுப்பு இந்திய வம்சாவளியினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



