கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்… உலக சந்தைக்கு அதிர்ச்சி

top-news
FREE WEBSITE AD

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலைக்கிடையில், United Arab Emirates (UAE) கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான OPEC மற்றும் OPEC+ கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு உலக எரிசக்தி சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த விலகல் மே 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும், பல தசாப்தங்களாக உறுப்பினராக இருந்த UAE இன் இந்த முடிவு OPEC அமைப்புக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

மேலும், Iran உடனான போர்நிலை மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடைகள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

UAE தனது தேசிய நலன்கள் மற்றும் நீண்டகால எரிசக்தி திட்டங்களை முன்னிறுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன . இதன் மூலம், OPEC கட்டுப்பாடுகளின்றி அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் சுதந்திரம் UAEக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது .

இந்த முடிவு OPEC அமைப்பின் ஒற்றுமையையும் அதன் உலக சந்தை மீதான கட்டுப்பாட்டையும் பலவீனப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் .


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *