சுபாங் தொகுதி பிகேஆர் கட்சியின் ஆண்டு பொதுக்கூட்டம்!

top-news
FREE WEBSITE AD

சுபாங் ஜெயா,அக். 5-

சுபாங் தொகுதி பிகேஆர் கட்சியின் ஆண்டு பொதுக்கூட்டம் சுபாங் ஜெயாவில் உள்ள கொம்ப்ளெக்ஸ் 3கே எனுமிடத்தில் 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இம்மாநாட்டை கட்சியின் தலைமை அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ சம்சுல்  இஸ்கண்டார் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என்று அத்தொகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் தியாராஜ் சங்கரநாராயணன் கூறினார்.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்வதோடு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். அத்துடன் எதிர்காலச் சவால்களை எதிர்நோக்கும் வகையில் சுபாங் தொகுதி தயார் நிலையில் இருக்கிறது.

கட்சியின் நிலை குறித்தும் அதன் வியூகங்கள் குறித்தும் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிப்பதோடு கட்சியின் முன்னேற்றத்திற்கும் வலிமைக்கும் உறுப்பினர்கள் தோள்கொடுத்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உறுப்பினர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று தியாகராஜ் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *