3ஆர் தொடர்பான உணர்வுகளைத் தூண்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்-ஃபாமி பாட்சில்!
- Muthu Kumar
- 26 Oct, 2024
கோலாலம்பூர், அக் 26:
பேராக்கில் அண்மையில் நடந்த கொடியேற்ற சம்பவத்தைத் தொடர்ந்து இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3ஆர்) தொடர்பான உணர்வுகளைத் தூண்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் 3R தொடர்பான கருத்துக்கள் வந்துள்ளதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.
பேராக் காவல்துறைத் தலைவர் (டத்தோ அசிசி மாட் அரிஸ்) அளித்த அறிக்கை தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பை காவல்துறையிடம் விட்டுவிடுவதாகவும் அவர் கூறினார்.பேராக்கின் தெலோக் இந்தானில் நடந்த ஒரு திருவிழாவின் போது பங்கேற்பாளர்கள் குழு சீனக் கொடிகளை அசைக்கும் காணொளி வியாழக்கிழமை முதல் சமூக ஊடகங்களில் வைரலானது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *