மானிய விலை சமையல் எண்ணெய் முறைகேடு – 15 பேர் கைது!
- Shan Siva
- 14 Nov, 2024
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 14: உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் அமலாக்கப் பிரிவு சிலாங்கூரில் மேற்கொண்ட இரண்டு சோதனைகளில் மானிய விலையில் சமையல் எண்ணெயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 15 பேரைக் கைது செய்தது.
தாமான் கஜாங்கில்
உள்ள ஒரு வீடு மற்றும் செமினியின் பண்டெ ரிஞ்சிங்கில் உள்ள வணிக வளாகம்
ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டதாக அதன் அமைச்சர் அர்மிசான் முகமட் அலி
தெரிவித்தார்.
முதல் இடத்தில் 25 முதல் 45 வயதுடைய 11
வெளிநாட்டவர்களும், இரண்டாவது
இடத்தில் 28 முதல் 36 வயதுடைய நான்கு மலேசிய ஆண்களும் கைது
செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *