மானிய விலை டீசல் மோசடி! - டத்தோ உட்பட இருவர் கைது!

top-news
FREE WEBSITE AD

சிபு, அக் 7: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி, சிபுவில் மானிய விலை டீசல் கடத்தலில தொடர்புடைய டத்தோ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட இருவரை கைது செய்துள்ளது

எம்ஏசிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சந்தேக நபர்களும், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காததற்காக, அமலாக்க முகமை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது. மானிய டீசலை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மானிய விலையில் டீசல் கொள்முதல் மற்றும் விற்பனையை நிர்வகிக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் மானிய டீசலை கடத்தல் மற்றும் வெளி தரப்பினருக்கு விற்பதன் மூலம் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மற்றும் நடவடிக்கையை மறைக்க, அவர்கள் பல சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இரண்டு சந்தேக நபர்களும் தலா 50 ஆயிரம் வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *