பாக்கெட் சமையல் எண்ணெய் மீதான உதவித்தொகை அகற்றப்படுமா?-ரபிஸி ரம்லி!

top-news
FREE WEBSITE AD

கோத்தாபாரு, நவ. 18-

பாக்கெட் சமையல் எண்ணெய்க்கு அளிக்கப்பட்டுவரும் உதவித்தொகையை அகற்றும் விவகாரம் குறித்து அரசாங்கம் விவாதித்துக் கொண்டிருக்கிறது என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி நேற்று தெரிவித்தார்.உதவித்தொகையுடன் கூடிய பாக்கெட் எண்ணெய் விரயமாவதைத் தடுக்கும் பிரச்சினையைத் தடுப்பதற்கு அதன் மானியத்தை அகற்ற வேண்டுமென்று கூறப்பட்டு வருகிறது. அந்த விவகாரம் குறித்து அரசாங்கம் பல தடவை விவாதித்துள்ளது என்று அவர் கூறினார்.

பாக்கெட் சமையல் எண்ணெய்க்கான உதவித்தொகை அகற்றப்பட்டாலும்கூட அதிலும் குறிப்பிட்ட சில ஆபத்துகள் உள்ளன. சமையல் மானியத்திற்காக அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டுள்ளது என்பதே இதற்கு காரணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.மானிய சமையல் எண்ணெய் கிடைக்கவில்லையா அல்லது அது தாய்லாந்தில் உள்ளதா எனும் தற்போதைய சூழ்நிலையே மீண்டும் ஏற்படும். ஆகவே, பாக்கெட் சமையல் எண்ணெய் விவகாரம் உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். இந்த விவகாரம் அமைச்சரவை நிலையில் பல தடவை விவாதிக்கப்பட்டு விட்டது என்று கோத்தாபாருவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரபிஸி தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. அந்த முடிவு தக்க நேரத்தில் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும். இப்போதைக்கு பெரிய அளவில் மானிய எண்ணெய் விரயமாகாமல் தடுப்பதற்கு சிறந்த வழி என்ன என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது என்றார் அவர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *