கோலாலம்பூர் - கிள்ளான் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 12: இன்று காலை பெய்த கன மழையைத் தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் கிள்ளானின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கம்போங் கெரிஞ்சிக்குத் திரும்புவதற்கு அருகிலுள்ள கூட்டரசு நெடுஞ்சாலை உட்பட, இது வழக்கத்தை விட கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது.

ஆஸ்ட்ரோ ரேடியோ டிராஃபிக், RRIM டோல் பிளாசாவில் இருந்து டாமன்சாரா-ஷா ஆலம் உயர்மட்ட விரைவுச்சாலையில் ஒரு மணிநேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முத்தியாரா டமன்சாரா அருகே பெர்சியாரான் சூரியன் என்ற இடத்தில் காலை 8.10 மணியளவில் ஐந்து வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியதாகவும், இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோலாலம்பூர் உட்பட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் - பெட்டாலிங், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான் மற்றும் கோம்பாக் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *