பட்ஜெட் 2025: வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் வகையில் புதிய வரி முறை!
- Shan Siva
- 18 Oct, 2024
கோலாலம்பூர்:
வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் வகையில் பல அடுக்கு
வரி விதிப்பு முறையை அரசாங்கம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதமர்
டத்த்க்ஹோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த
வரியிலிருந்து கிடைக்கும் வருமானம்,
பல்வேறு துறைகளில்
தானியங்கி மற்றும் இயந்திரமயமாக்கலை எளிதாக்கும் வகையில் மீண்டும் முதலீடு
செய்யப்படும் என்று அவர் கூறினார்.
டிஜிட்டல்
மயமாக்கல் முயற்சிகளில் உள்ளூர் தொழில்முனைவோருக்கு உதவ மானியங்களுக்காக RM50 மில்லியன் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஆன்லைன் தொழில்
முனைவோர் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் உள்ள NADI மையங்களை வலுப்படுத்த ஐந்து ஆண்டுகளில் RM100 மில்லியன்
ஒதுக்கப்படும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *