2025 பட்ஜெட் – ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 30: 2025 பட்ஜெட், ஏழைகளுக்கு தொடர்ந்து உதவும் என்றும் பணக்காரர்கள் அதிக மானியத்துடன் கூடிய கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சுட்டிக்காட்டினார்.

பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்குச் செல்ல வேண்டிய கல்வி வாய்ப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் செல்வந்தர்கள் சம்பந்தப்பட்ட 'கசிவுகள்' நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அடுத்த மாதம் (அக்டோபர் 18) பட்ஜெட் அறிவிப்புக்கு முன் இது ஒரு ஆரம்ப குறிப்பு மட்டுமே. நாம் உண்மையிலேயே நியாயமாக இருக்க விரும்பினால், அது பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உட்பட தேவைப்படுபவர்களுக்கு நியாயமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், ஆட்டிஸ்டிக் குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்று கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *