கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 2025 பட்ஜெட்-துணைப் பிரதமர்

top-news
FREE WEBSITE AD

2025 பட்ஜெட்டில் கிராமப்புறங்களில், குறிப்பாக சரவாக் மற்றும் சபாவில் வசிப்பவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது  என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், சமூகத்தின் அனைத்து நிலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும் உள்ளது என்று அவர் கூறினார்.கிராமப்புறங்களில் 8.1 மில்லியன் மலேசியர்கள் வசிக்கும் நிலையில், அவர்களின் தேவைகளில் பிரதமர் அக்கறை காட்டுகிறார்.  அவர்களை புறக்கணிக்க மாட்டார் என்பதை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *