ஏப்ரல் 18ம் தேதி ரெட்ரோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா?

top-news

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 2025, ஏப்ரல் 18ம் தேதியில், சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் வைத்து நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 44வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படம் தமிழில் இவர் நடித்த 3வது திரைப்படமாகும். இப்படத்தை அடுத்து அவர் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், நாசர், ஜெயராம், சுஜித் ஷங்கர், ஜோஜு ஜார்ஜ், பிரேம் குமார், நந்திதா டாஸ், ஜார்ஜ் மரியான், உதய் மகேஷ் எனப் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படமானது தமிழில் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் பாடமானது பான் இந்திய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *