தமிழ்மொழிக்குக் கூடுதல் வகுப்பா? தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராகப் பாஸ் கட்சி!

top-news

ஜூலை 27,

UEC எனப்படும் ஒருங்கிணைந்த தேர்வு முறைகளால் தாய்மொழியான தமிழ் மற்றும் சீன மொழிகளுக்கானக் கற்றல் கற்பித்தல் நேரம் அதிகரிக்கபடும் என கல்வி அமைச்சின் புதிய கல்விக் கோட்பாடுகளை டி.ஏ.பி கட்சி ஆதரிப்பது மலேசியாவின் தேசிய மொழிக்கான அடையாளத்தை இழக்க செய்யும் பேராபத்து என பாஸ் கட்சியின் தலைமை தொடர்பாளர் Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார். மலேசிய அடையாள அட்டையைக் கொண்டிருந்தால் மட்டும் நீங்கள் மலேசியராகி விட முடியாது. தேசிய மொழிக்கு எதிராகச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளும் படி Ahmad Fadhli Shaari டி.ஏ.பிக்கு எச்சரிக்கை விடுத்தார். 

கடந்த 1980 முதல் UEC எனப்படும் ஒருங்கிணைந்த தேர்வு முறையைக் கல்வி அமைச்சு அமல்படுத்த வேண்டும் என டி.ஏ.பி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது. தற்போது பக்காத்தானின் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தலைமையிலான கல்வி அமைச்சு புதிய கல்விக் கொள்கையில் UEC முறைமைகளை ஆராய்ந்து, அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

UEC தேர்வு முறைமையால் நிர்ணயிக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் நேரத்தை விடவும் அதிகமான நேரத்தைப் பள்ளிகளில் தாய்மொழி வகுப்புகள் நடத்தப்படவும் வழிவகுக்கிறது. இதனால் பள்ளி நேரங்களில் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடங்களையும் கற்க முடியும். பள்ளி நேரத்திற்குப் பின்னர் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்ப் பாடங்கள் கூடுதல் வகுப்பாகவும் கற்பிப்பதுடன் பல்கலைக்கழகத் தேர்வுகளிலும் தாய்மொழிப் பாடம் தேர்வு பாடமாகவும் அங்கீகரிக்கப்படும். 

UEC தேர்வு முறைமையால் தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தாய்மொழிப் பாடங்களும் தேர்வுக்கான அங்கீகாரப் பாடமாக ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு மலாய் மொழி அல்லாத பிற மொழிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவது தேசிய மொழியின் மீதான மகத்துவத்தையும் சிறப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்பதால் பாஸ் கட்சியின் PASIR MAS நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியின் தலைமை தொடர்பாளருமான Ahmad Fadhli Shaari எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *