தற்போதைய சூழ்நிலையால் ஒற்றுமை அரசாங்கம் 13 முதல் 26 தொகுதிகளை இழக்கலாம்!
- Muthu Kumar
- 20 Nov, 2024
பெட்டாலிங் ஜெயா, நவ. 20-
தற்போதைய சூழ்நிலை நீடிக்குமானால் வரும் பதினாறாவது பொதுத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் தீபகற்ப மலேசியாவில் 13 முதல் 26 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க வேண்டி வரலாம் என்று ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் மீது தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை இன்னும் குறையாமல் உள்ளது என்று தெரிவித்தது. தேசிய முன்னணியின் ஆதரவாளர்களில் 71.3 விழுக்காட்டினர் முதல் 100 விழுக்காட்டினர் வரை பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளது. 71.3 விழுக்காட்டினர் பெரிக்காத்தானுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் பக்காத்தான் ஹராப்பான் 13 நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கலாம்.
அவற்றில் பேராக்கில் உள்ள தம்புன், தஞ்சோங் மாலிம், கெடாவில் உள்ள சுங்கை பட்டாணி ஆகியவையும் அடங்கும். அத்தொகுதிகள் தற்போ பிகேஆர் வசம் உள்ளன. மேலும், ஜசெகவின் வசமுள்ள பகாங்கின் பெந்தோங் மற்றும் ரவூப் தொகுதிகள், கோலசிலாங்கூர், அலோர்காஜா ஆகிய தொகுதிகளை பக்காத்தான் இழக்க வேண்டி வரலாம் என்று “தி ஸ்டார்” நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *