அன்வாரின் அறிவிப்புகளுக்கு முஹைதீன் பாராட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைக்கவும், வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும் அரசாங்கம் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் வரவேற்றுள்ளார், ஆனால் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் பரந்த அளவிலான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மாதாந்திர மானிய விலையிலான RON95 எரிபொருள் ஒதுக்கீட்டை 200 லிட்டரிலிருந்து 300 லிட்டராக மீண்டும் உயர்த்துவதும், ஆண்டு விற்பனை RM3 மில்லியன் வரை உள்ள வணிகங்களுக்கு மின்-விலைப்பட்டியல் (e-Invoice) விலக்கு வரம்பை உயர்த்துவதும், அதிகரித்து வரும் செலவுகளை எதிர்கொள்ளும் குடும்பங்கள் மற்றும் வணிகங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்று பெர்சாத்து தலைவர் கூறினார்.

பள்ளிப் பராமரிப்பிற்காகக் கூடுதலாக RM500 மில்லியன், பொது சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல், இளைஞர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை இலவசமாகப் பயன்படுத்துதல், சிறு வணிகர்களுக்கான குறுங்கடன் வசதிகளில் கூடுதலாக RM1 பில்லியன் மற்றும் நடைபாதை வியாபாரிகள், இரவுச் சந்தை வணிகர்கள் மற்றும் வீட்டிலிருந்து தொழில் நடத்தும் பெண்களுக்கு RM200 மில்லியன் மானியம் உள்ளிட்ட பிரதமர் டத்தோ  ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த மற்ற நடவடிக்கைகளையும் அவர் வரவேற்றார்.

மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கவும், வணிகங்களுக்கு உதவவும், அரசாங்க சேவை வழங்கலை வலுப்படுத்தவும் பிரதமர் அறிவித்துள்ள நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதோடு, கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அரசாங்க சேவைகளை மேம்படுத்தும் என்றும் முஹைதீன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *