ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்: 7 பேர் பலி
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
மாஸ்கோ: ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியா–உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்புகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இதுவரை எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் ரஷியாவின் பெல்கொரோட் மற்றும் அஸ்ட்ராகான் மாகாணங்களைக் குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



