ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி; 39 பேர் காயம்
- Surendran Sumdraraj
- 11 Aug, 2026
மாஸ்கோ, ஆக. 11-
ரஷியாவின் தத்தாரிஸ்தான் மாகாணத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தத்தாரிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிஸ்னேகாம்ஸ்க் நகரில் அதிகாலை நேரத்தில் இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி, அங்குள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



