ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: இந்திய மாணவர் காயம்
- Surendran Sumdraraj
- 20 Aug, 2026
மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ரஷியாவின் பஷ்கோர்டோஸ்தான் மாகாணத்தில் உள்ள உஃபா நகரை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அங்குள்ள பஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மாணவரையும், உள்ளூர் அதிகாரிகளையும் தொடர்புகொண்டது. மாணவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



