அமரன் படம் போலவே மக்கள் மனதில் இடம் பிடித்த துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்!

top-news

தீபாவளி ரிலீஸாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் என்ற தெலுங்கு படம், தமிழில் வெளியானது. இந்த படம், மிக வித்யாசமான கதைக்களத்தில் உருவான படமாகவும், பணத்தை மையக் கருவாக கொண்டும் எடுக்கப்பட்ட படமாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அமரனை போலவே, லக்கி பாஸ்கர் படம் துல்கர் சல்மானுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அவரது கேரியரில் அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த படம் ரிலீஸாகி 5 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் 58 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி விடும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. ஏனெனில் பாசிட்டிவ் விமர்சனங்களால் இந்த படத்துக்கு ரசிகர் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *